React Reference மேலோட்டம்

React-உடன் வேலை செய்வதற்கான விரிவான reference documentation-ஐ இந்தப் பகுதி வழங்குகிறது. React அறிமுகத்திற்கு, Learn பகுதியைப் பாருங்கள்.

React reference documentation செயல்பாட்டு அடிப்படையிலான துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

React

நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படும் React அம்சங்கள்:

  • Hooks - உங்கள் components-இலிருந்து பல்வேறு React அம்சங்களைப் பயன்படுத்துங்கள்.
  • Components - உங்கள் JSX-இல் பயன்படுத்தக்கூடிய உள்ளமைந்த components.
  • APIs - components-ஐ வரையறுக்க பயனுள்ள API-கள்.
  • Directives - React Server Components-உடன் இணக்கமான bundlers-க்கு வழிமுறைகளை வழங்குகின்றன.

React DOM

React DOM, web applications-இல் மட்டும் ஆதரிக்கப்படும் அம்சங்களை கொண்டுள்ளது (அவை browser DOM சூழலில் இயங்குகின்றன). இந்தப் பகுதி பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:

  • Hooks - browser DOM சூழலில் இயங்கும் web applications-க்கான Hooks.
  • Components - உலாவியில் உள்ளமைந்த அனைத்து HTML மற்றும் SVG components-ஐ React ஆதரிக்கிறது.
  • APIs - react-dom package, web applications-இல் மட்டும் ஆதரிக்கப்படும் methods-ஐக் கொண்டுள்ளது.
  • Client APIs - react-dom/client API-கள் React components-ஐ client-இல் (உலாவியில்) render செய்ய உதவுகின்றன.
  • Server APIs - react-dom/server API-கள் React components-ஐ server-இல் HTML ஆக render செய்ய உதவுகின்றன.
  • Static APIs - react-dom/static API-கள் React components-க்கான static HTML-ஐ உருவாக்க உதவுகின்றன.

React Compiler

React Compiler என்பது உங்கள் React components மற்றும் values-ஐ தானாக memoize செய்யும் build-time optimization கருவி:

  • Configuration - React Compiler-க்கான configuration options.
  • Directives - compilation-ஐ கட்டுப்படுத்த function-level directives.
  • Compiling Libraries - முன்கூட்டியே compiled செய்யப்பட்ட library code-ஐ வெளியிடுவதற்கான வழிகாட்டி.

ESLint Plugin React Hooks

React Hooks-க்கான ESLint plugin, React விதிகளைப் பின்பற்றச் செய்ய உதவுகிறது:

  • Lints - ஒவ்வொரு lint-க்கும் உதாரணங்களுடன் கூடிய விரிவான documentation.

Rules of React

நேரடியாகப் புரிந்துகொள்ளக்கூடியதும், உயர்தர applications-ஐ உருவாக்கக்கூடியதுமான முறையில் patterns-ஐ வெளிப்படுத்த React-க்கு idioms அல்லது விதிகள் உள்ளன:

  • Components மற்றும் Hooks pure ஆக இருக்க வேண்டும் – Purity உங்கள் code-ஐப் புரிந்துகொள்வதும் debug செய்வதும் உதவுகிறது; மேலும் React உங்கள் components மற்றும் hooks-ஐ சரியாக தானாக optimize செய்ய உதவுகிறது.
  • React தான் Components மற்றும் Hooks-ஐ அழைக்கிறது – User experience-ஐ optimize செய்ய தேவையானபோது components மற்றும் hooks-ஐ render செய்வதற்கு React பொறுப்பாகும்.
  • Hooks விதிகள் – Hooks JavaScript functions-ஐப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகின்றன; ஆனால் அவை எங்கு அழைக்கப்படலாம் என்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய UI logic-இன் ஒரு சிறப்பு வகையை குறிக்கின்றன.

Legacy APIs

  • Legacy API-கள் - react package-இலிருந்து export செய்யப்படுகின்றன, ஆனால் புதிதாக எழுதப்படும் code-இல் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.