prefetchDNS

prefetchDNS, resources load செய்யப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் server-இன் IP-ஐ முன்கூட்டியே lookup செய்ய உதவுகிறது.

prefetchDNS("https://example.com");

Reference

prefetchDNS(href)

ஒரு host-ஐ lookup செய்ய, react-dom-இலிருந்து prefetchDNS function-ஐ அழைக்கவும்.

import { prefetchDNS } from 'react-dom';

function AppRoot() {
prefetchDNS("https://example.com");
// ...
}

மேலும் உதாரணங்களை கீழே பார்க்கவும்.

கொடுக்கப்பட்ட server-இன் IP address-ஐ lookup செய்ய வேண்டும் என்ற hint-ஐ prefetchDNS function browser-க்கு வழங்குகிறது. Browser அதைச் செய்யத் தேர்ந்தெடுத்தால், அந்த server-இலிருந்து resources load ஆகும் வேகம் அதிகரிக்கலாம்.

Parameters

  • href: ஒரு string. நீங்கள் connect செய்ய விரும்பும் server-இன் URL.

Returns

prefetchDNS எதையும் return செய்யாது.

Caveats

  • அதே server-க்கு prefetchDNS-ஐ பலமுறை அழைப்பது, ஒருமுறை அழைப்பதற்குச் சமமான விளைவையே தரும்.
  • Browser-இல் எந்த சூழலிலும் prefetchDNS-ஐ அழைக்கலாம்: component render ஆகும்போது, Effect-இல், event handler-இல், மற்றும் இதுபோன்ற இடங்களில்.
  • Server-side rendering-இல் அல்லது Server Components render செய்யும்போது, component render ஆகும் நேரத்தில் அல்லது component render-இலிருந்து தொடங்கிய async context-இல் அழைத்தால் மட்டுமே prefetchDNS விளைவளிக்கும். மற்ற எல்லா calls-உம் புறக்கணிக்கப்படும்.
  • உங்களுக்கு தேவைப்படும் குறிப்பிட்ட resources தெரிந்திருந்தால், resources-ஐ உடனே load செய்யத் தொடங்கும் பிற functions-ஐ அதற்கு பதிலாக அழைக்கலாம்.
  • Webpage தானே hosted ஆகும் அதே server-ஐ prefetch செய்வதில் பலன் இல்லை; hint வழங்கப்படும் நேரத்துக்குள் அது ஏற்கனவே lookup செய்யப்பட்டிருக்கும்.
  • preconnect-உடன் ஒப்பிடும்போது, பல domains-க்கு ஊகத்தின் அடிப்படையில் connect செய்யும் சூழலில் prefetchDNS சிறந்ததாக இருக்கலாம். அப்படி இருக்கும் போது preconnections-இன் overhead, அதன் பயனை விட அதிகமாகலாம்.

Usage

Render செய்யும்போது DNS prefetch செய்தல்

அதன் children அந்த host-இலிருந்து external resources load செய்யும் என்பது தெரிந்திருந்தால், component render செய்யும்போது prefetchDNS-ஐ அழைக்கவும்.

import { prefetchDNS } from 'react-dom';

function AppRoot() {
prefetchDNS("https://example.com");
return ...;
}

Event handler-இல் DNS prefetch செய்தல்

External resources தேவைப்படும் page அல்லது state-க்கு மாறுவதற்கு முன், event handler-இல் prefetchDNS-ஐ அழைக்கவும். புதிய page அல்லது state render ஆகும் போது அழைப்பதை விட, இது செயல்முறையை முன்கூட்டியே தொடங்குகிறது.

import { prefetchDNS } from 'react-dom';

function CallToAction() {
const onClick = () => {
prefetchDNS('http://example.com');
startWizard();
}
return (
<button onClick={onClick}>Start Wizard</button>
);
}