கிளையண்ட் React DOM API-கள்

react-dom/client API-கள், கிளையண்டில் (உலாவியில்) React components-ஐ render செய்ய உதவுகின்றன. உங்கள் React tree-ஐ தொடங்க, இந்த API-கள் பொதுவாக உங்கள் app-இன் மேல் நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு framework உங்களுக்குப் பதிலாக அவற்றை அழைக்கலாம். உங்கள் பெரும்பாலான components அவற்றை import செய்யவோ பயன்படுத்தவோ தேவையில்லை.


கிளையண்ட் API-கள்

  • createRoot ஒரு browser DOM node-க்குள் React components-ஐ காட்ட root ஒன்றை உருவாக்க உதவுகிறது.
  • hydrateRoot முன்பே react-dom/server. மூலம் HTML உள்ளடக்கம் உருவாக்கப்பட்ட browser DOM node-க்குள் React components-ஐ காட்ட உதவுகிறது.

உலாவி ஆதரவு

Internet Explorer 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் உட்பட, அனைத்து பிரபலமான உலாவிகளையும் React ஆதரிக்கிறது. IE 9 மற்றும் IE 10 போன்ற பழைய உலாவிகளுக்கு சில polyfills தேவைப்படும்.