<progress>

உலாவியில் உள்ளமைந்த <progress> component, progress indicator ஒன்றை render செய்ய உதவுகிறது.

<progress value={0.5} />

Reference

<progress>

Progress indicator ஒன்றைக் காட்ட, உலாவியில் உள்ளமைந்த <progress> component-ஐ render செய்யுங்கள்.

<progress value={0.5} />

மேலும் உதாரணங்களை கீழே பார்க்கவும்.

Props

<progress> அனைத்து common element props-ஐ ஆதரிக்கிறது.

மேலும், <progress> இந்த props-ஐ ஆதரிக்கிறது:

  • max: ஒரு number. அதிகபட்ச value-ஐ குறிப்பிடுகிறது. Default ஆக 1.
  • value: 0 மற்றும் max இடையிலான number, அல்லது முடிவறியாத progress-க்கு null. எவ்வளவு முடிந்துள்ளது என்பதை குறிப்பிடுகிறது.

Usage

Progress indicator-ஐ கட்டுப்படுத்துதல்

Progress indicator ஒன்றைக் காட்ட, <progress> component-ஐ render செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடும் max value மற்றும் 0 இடையிலான number value-ஐ pass செய்யலாம். max value-ஐ pass செய்யவில்லை என்றால், default ஆக அது 1 என்று கருதப்படும்.

செயல்பாடு இன்னும் நடைபெற்று கொண்டிருந்தாலும் அதன் அளவு தெரியாவிட்டால், progress indicator-ஐ indeterminate state-இல் வைக்க value={null} pass செய்யுங்கள்.

export default function App() {
  return (
    <>
      <progress value={0} />
      <progress value={0.5} />
      <progress value={0.7} />
      <progress value={75} max={100} />
      <progress value={1} />
      <progress value={null} />
    </>
  );
}