error-boundaries
Child components-இல் ஏற்படும் errors-க்கு try/catch-க்கு பதிலாக Error Boundaries பயன்படுத்தப்படுகிறதா என்பதை validate செய்கிறது.
விதி விவரங்கள்
React rendering process நடக்கும் போது ஏற்படும் errors-ஐ try/catch blocks பிடிக்க முடியாது. Rendering methods அல்லது hooks-இல் throw செய்யப்படும் errors component tree வழியாக மேலே செல்கின்றன. இந்த errors-ஐ Error Boundaries மட்டுமே பிடிக்க முடியும்.
செல்லாதது
இந்த விதிக்கான தவறான code உதாரணங்கள்:
// ❌ Try/catch won't catch render errors
function Parent() {
try {
return <ChildComponent />; // If this throws, catch won't help
} catch (error) {
return
Error occurred

}செல்லுபடியாகும்
இந்த விதிக்கான சரியான code உதாரணங்கள்:
// ✅ Using error boundary
function Parent() {
return (
<ErrorBoundary>
<ChildComponent />
</ErrorBoundary>

}Troubleshooting
use-ஐ try/catch-இல் wrap செய்ய வேண்டாம் என்று linter ஏன் சொல்கிறது?
use hook வழக்கமான அர்த்தத்தில் errors throw செய்யாது; அது component execution-ஐ suspend செய்கிறது. use pending promise ஒன்றை சந்திக்கும்போது, component-ஐ suspend செய்து React fallback காட்ட அனுமதிக்கிறது. Suspense மற்றும் Error Boundaries மட்டுமே இந்நிலைகளை கையாள முடியும். catch block ஒருபோதும் இயங்காது என்பதால் குழப்பத்தைத் தவிர்க்க, use சுற்றி try/catch பயன்படுத்த வேண்டாம் என்று linter எச்சரிக்கிறது.
// ❌ Try/catch around `use` hook
function Component({promise}) {
try {
const data = use(promise); // Won't catch - `use` suspends, not throws
return
{data}

} catch (error) {
return
Failed to load
; // Unreachable

// ✅ Error boundary catches `use` errors
function App() {
return (
<ErrorBoundary fallback={
Failed to load

<Suspense fallback={
Loading...

<DataComponent promise={fetchData()} />
</Suspense>
</ErrorBoundary>