உள்ளமைந்த React API-கள்

Hooks மற்றும் Components-க்கு கூடுதலாக, components-ஐ வரையறுக்க பயனுள்ள இன்னும் சில API-களை react package export செய்கிறது. மீதமுள்ள அனைத்து நவீன React API-களையும் இந்தப் பக்கம் பட்டியலிடுகிறது.


  • createContext context-ஐ வரையறுத்து child components-க்கு வழங்க உதவுகிறது. useContext.-உடன் பயன்படுத்தப்படுகிறது
  • lazy ஒரு component-இன் code முதல் முறையாக render ஆகும் வரை அதை load செய்வதை தள்ளிப்போட உதவுகிறது.
  • memo அதே props வந்தால் உங்கள் component மீண்டும் render ஆகாமல் தவிர்க்க உதவுகிறது. useMemo மற்றும் useCallback.-உடன் பயன்படுத்தப்படுகிறது
  • startTransition ஒரு state update அவசரமற்றது என்று குறிக்க உதவுகிறது. useTransition.-க்கு ஒத்தது
  • act tests-இல் renders மற்றும் interactions-ஐ சுற்றி அமைத்து, assertions செய்வதற்கு முன் updates செயலாக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.

Resource API-கள்

Resources ஒரு component-இன் state-இல் இல்லாவிட்டாலும் அந்த component அவற்றை அணுக முடியும். உதாரணமாக, ஒரு component Promise-இலிருந்து message ஒன்றைப் படிக்கலாம் அல்லது context-இலிருந்து styling தகவலைப் படிக்கலாம்.

ஒரு resource-இலிருந்து value-ஐப் படிக்க, இந்த API-யைப் பயன்படுத்துங்கள்:

  • use Promise அல்லது context போன்ற resource-இன் value-ஐப் படிக்க உதவுகிறது.
function MessageComponent({ messagePromise }) {
const message = use(messagePromise);
const theme = use(ThemeContext);
// ...
}