preconnect

preconnect, resources load செய்யப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் server-க்கு முன்கூட்டியே connect செய்ய உதவுகிறது.

preconnect("https://example.com");

Reference

preconnect(href)

ஒரு host-க்கு preconnect செய்ய, react-dom-இலிருந்து preconnect function-ஐ அழைக்கவும்.

import { preconnect } from 'react-dom';

function AppRoot() {
preconnect("https://example.com");
// ...
}

மேலும் உதாரணங்களை கீழே பார்க்கவும்.

கொடுக்கப்பட்ட server-க்கு connection ஒன்றைத் திறக்க வேண்டும் என்ற hint-ஐ preconnect function browser-க்கு வழங்குகிறது. Browser அதைச் செய்யத் தேர்ந்தெடுத்தால், அந்த server-இலிருந்து resources load ஆகும் வேகம் அதிகரிக்கலாம்.

Parameters

  • href: ஒரு string. நீங்கள் connect செய்ய விரும்பும் server-இன் URL.

Returns

preconnect எதையும் return செய்யாது.

Caveats

  • அதே server-க்கு preconnect-ஐ பலமுறை அழைப்பது, ஒருமுறை அழைப்பதற்குச் சமமான விளைவையே தரும்.
  • Browser-இல் எந்த சூழலிலும் preconnect-ஐ அழைக்கலாம்: component render ஆகும்போது, Effect-இல், event handler-இல், மற்றும் இதுபோன்ற இடங்களில்.
  • Server-side rendering-இல் அல்லது Server Components render செய்யும்போது, component render ஆகும் நேரத்தில் அல்லது component render-இலிருந்து தொடங்கிய async context-இல் அழைத்தால் மட்டுமே preconnect விளைவளிக்கும். மற்ற எல்லா calls-உம் புறக்கணிக்கப்படும்.
  • உங்களுக்கு தேவைப்படும் குறிப்பிட்ட resources தெரிந்திருந்தால், resources-ஐ உடனே load செய்யத் தொடங்கும் பிற functions-ஐ அதற்கு பதிலாக அழைக்கலாம்.
  • Webpage தானே hosted ஆகும் அதே server-க்கு preconnect செய்வதில் பலன் இல்லை; hint வழங்கப்படும் நேரத்துக்குள் அதற்கு ஏற்கனவே connect செய்யப்பட்டிருக்கும்.

Usage

Render செய்யும்போது preconnect செய்தல்

அதன் children அந்த host-இலிருந்து external resources load செய்யும் என்பது தெரிந்திருந்தால், component render செய்யும்போது preconnect-ஐ அழைக்கவும்.

import { preconnect } from 'react-dom';

function AppRoot() {
preconnect("https://example.com");
return ...;
}

Event handler-இல் preconnect செய்தல்

External resources தேவைப்படும் page அல்லது state-க்கு மாறுவதற்கு முன், event handler-இல் preconnect-ஐ அழைக்கவும். புதிய page அல்லது state render ஆகும் போது அழைப்பதை விட, இது செயல்முறையை முன்கூட்டியே தொடங்குகிறது.

import { preconnect } from 'react-dom';

function CallToAction() {
const onClick = () => {
preconnect('http://example.com');
startWizard();
}
return (
<button onClick={onClick}>Start Wizard</button>
);
}