React DOM API-கள்

react-dom package, web applications-க்கு மட்டும் ஆதரிக்கப்படும் methods-ஐக் கொண்டுள்ளது (அவை browser DOM சூழலில் இயங்குகின்றன). அவை React Native-க்கு ஆதரிக்கப்படவில்லை.


APIs

இந்த API-களை உங்கள் components-இலிருந்து import செய்யலாம். அவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன:

  • createPortal child components-ஐ DOM tree-இன் வேறு பகுதியில் render செய்ய உதவுகிறது.
  • flushSync ஒரு state update-ஐ flush செய்து DOM-ஐ synchronously update செய்ய React-ஐ கட்டாயப்படுத்த உதவுகிறது.

Resource Preloading API-கள்

Scripts, stylesheets, மற்றும் fonts போன்ற resources தேவைப்படும் என்று தெரிந்தவுடன் அவற்றை முன்கூட்டியே load செய்து apps-ஐ வேகமாக்க இந்த API-களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அந்த resources பயன்படுத்தப்படும் வேறு பக்கத்துக்கு navigate செய்வதற்கு முன் இதைச் செய்யலாம்.

React அடிப்படையிலான frameworks பெரும்பாலும் resource loading-ஐ உங்களுக்குப் பதிலாக கையாளும், எனவே இந்த API-களை நீங்களே அழைக்க வேண்டியிருக்காமல் இருக்கலாம். விவரங்களுக்கு உங்கள் framework-இன் documentation-ஐப் பாருங்கள்.

  • prefetchDNS நீங்கள் connect செய்யப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்கும் DNS domain name-இன் IP address-ஐ prefetch செய்ய உதவுகிறது.
  • preconnect இன்னும் எந்த resources தேவைப்படும் என்று தெரியாவிட்டாலும், resources கேட்கப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்கும் server-க்கு connect செய்ய உதவுகிறது.
  • preload நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்கும் stylesheet, font, image, அல்லது external script-ஐ fetch செய்ய உதவுகிறது.
  • preloadModule நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்கும் ESM module-ஐ fetch செய்ய உதவுகிறது.
  • preinit external script ஒன்றை fetch செய்து evaluate செய்யவும், அல்லது stylesheet ஒன்றை fetch செய்து insert செய்யவும் உதவுகிறது.
  • preinitModule ESM module ஒன்றை fetch செய்து evaluate செய்ய உதவுகிறது.

Entry points

react-dom package இரண்டு கூடுதல் entry points-ஐ வழங்குகிறது:

  • react-dom/client client-இல் (உலாவியில்) React components-ஐ render செய்யும் API-களை கொண்டுள்ளது.
  • react-dom/server server-இல் React components-ஐ render செய்யும் API-களை கொண்டுள்ளது.

நீக்கப்பட்ட API-கள்

இந்த API-கள் React 19-இல் நீக்கப்பட்டன: