உள்ளமைந்த React DOM Hooks
react-dom package, web applications-இல் மட்டும் ஆதரிக்கப்படும் Hooks-ஐக் கொண்டுள்ளது (அவை browser DOM சூழலில் இயங்குகின்றன). iOS, Android, அல்லது Windows applications போன்ற browser அல்லாத சூழல்களில் இந்த Hooks ஆதரிக்கப்படவில்லை. Web browsers மற்றும் பிற சூழல்களிலும் ஆதரிக்கப்படும் Hooks-ஐத் தேடுகிறீர்கள் என்றால், React Hooks பக்கத்தை பார்க்கவும். react-dom package-இல் உள்ள அனைத்து Hooks-ஐ இந்தப் பக்கம் பட்டியலிடுகிறது.
Form Hooks
Forms தகவலை சமர்ப்பிக்க interactive controls உருவாக்க உதவுகின்றன. உங்கள் components-இல் forms-ஐ நிர்வகிக்க, இந்த Hooks-இல் ஒன்றைப் பயன்படுத்துங்கள்:
useFormStatusஒரு form-இன் status அடிப்படையில் UI-யில் updates செய்ய அனுமதிக்கிறது.
function Form({ action }) {
async function increment(n) {
return n + 1;
}
const [count, incrementFormAction] = useActionState(increment, 0);
return (
<form action={action}>
<button formAction={incrementFormAction}>Count: {count}</button>
<Button />
</form>
);
}
function Button() {
const { pending } = useFormStatus();
return (
<button disabled={pending} type="submit">
Submit
</button>
);
}